தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள மலையாள ரீமேக்கான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், அவர் எடுக்கும் முடிவு ஆகியவற்றை சொல்லிய படம் இது.

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன். நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தை தமிழில் ஏற்று நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுராஜ் வெஞ்சரமூட் கதாபாத்திரத்தில் ராகுல் ரவீந்திரன் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதனிடையே, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 29ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் தமிழக உரிமையை சக்திவேல் பிலிம் பேக்ட்ரி வாங்கியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT