'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவருமே நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டார்கள்.
தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் 'சரவணன் மீனாட்சி'. இத்தொடரில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்திருந்தனர். இளைஞர்கள் மத்தியில் 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலமாக இருவருமே பிரபலமாக வலம் வந்தனர்.
இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இருவருமே அச்செய்திகளை மறுத்து வந்தார்கள். செந்திலுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருப்பதியில் செந்தில், ஸ்ரீஜா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். செந்திலுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு திருமணமான செய்தியினை நடிகர் பாலாஜி தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் உறுதி செய்திருக்கிறார்.