புகழ்பெற்ற 'டேக் இட் ஈஸி ஊர்வசி'பாடலுக்கான புதிய வரிகளை ரசிகர்களே எழுதித் தாருங்கள் என அந்தப் பாடலின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.கோரிக்கை விடுத்துள்ளார்.
1994-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'காதலன்'. பிரபுதேவா, நக்மா, எஸ்.பி.பாலசுப்பிரமணியின் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்களும், படமும் சூப்பர் ஹிட் ஆனது வரலாறு. குறிப்பாக ’டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடல் இன்றளவும் கூடப் பிரபலம்.
தற்போது இந்தப் பாடலை ஒரு இசை நிகழ்ச்சியில் மேடையேற்ற முடிவு செய்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அந்தப் பாடல் சரணத்தின் வரிகளை இன்றைய சூழலுக்கு ஏற்றாவாறு மாற்றியமைக்க விரும்புவதாகவும், அதற்கு ரசிகர்களே சுவாரசியமான, நகைச்சுவையான வரிகளை தரலாம் என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தல், ஹிலாரி கிளிண்டன், ட்ரம்ப் ஆகியோரது பேரையெல்லாம் பயன்படுத்தி வரிகள் எழுத வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதில் தேர்ந்தெடுக்கப்படும் வரிகள் அவரது இசை நிகழ்ச்சியில் பாட்டோடு சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.
ரஹ்மானின் பதிவு