பாடகரும் இசையமைப் பாளருமான அந்தோணிதாசன், நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ‘ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் என்னும் ஆடியோ நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஜமைக்காவைச் சேர்ந்த மக்களால் பாராட்டப்பட்ட இசைக் கலைஞர் பாப் மார்லி. அவர் பெயரில் இந்த நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன்.
நம் மண்ணின் இசை எங்கும் பரவி கிடக்கிறது. இன்னும் சரியான அடையாளம் கிடைக்காதவர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமையை பாடல், எழுத்து, இசை, ஆல்பம் மூலம் வெளியுலகுக்கு காட்ட இந்நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன்” என்றார்.