தமிழ் சினிமா

த்ரிஷாவின் ‘ராங்கி’க்கு 30 கட்!

செய்திப்பிரிவு

‘எங்கேயும் எப்போதும்’சரவணன் இயக்கியுள்ள படம், ‘ராங்கி’ த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதன் கதையை எழுதியுள்ளார். வரும் 30ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநர் சரவணன் கூறியதாவது: இதில் தையல்நாயகி என்ற பத்திரிகையாளராக த்ரிஷா நடிக்கிறார். அவர் குடும்பத்தில் நடக்கும் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, அது சர்வதேச பிரச்னைக்கு இழுத்துச் செல்கிறது. அதை எப்படி முறியடிக்கிறார் என்று கதை செல்லும்.

அவர் எதை சரி என்று நினைக்கிறாரோ, அதன்படி முடிவு எடுப்பார். அதனால், ராங்கி என்று தலைப்பு வைத்தோம். இதில் த்ரிஷா மேக்கப் இல்லாமல் நடித்துள்ளார். சென்சாரில் பல பிரச்னைகளைச் சந்தித்தோம். வெளிநாட்டுப் பிரச்சனை வருவதால், 30 இடங்களில் கட் மற்றும் மியூட் செய்யப்பட்டது. இருந்தாலும் அது கதையை எங்கும் பாதிக்கவில்லை. இவ்வாறு சரவணன் கூறினார்.

SCROLL FOR NEXT