ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் அவரது முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.
கலாநிதி மாறன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அனிருத்தின் பின்னணி இசை ஒலிக்க, விஜய் கார்த்திக் கண்ணன் லென்சில் ரம்மியமான கேமரா கோணங்களில் ரஜினியின் இன்ட்ரோ ஸ்டைலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியில் பட்டாக்கத்தியை கையிலெடுக்கும் ரஜினியின் க்ளோசப் ஷாட்டுடன் வீடியோ நிறைவடைகிறது. வீடியோ: