தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘விட்னஸ்’ திரைப்படம், வரும் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.
அறிமுக இயக்குநர் தீபக் இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். தி பீப்பிள் மீடியா பேக்டரி சார்பாக டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரித்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி.செல்வா, சுபத்ரா ராபர்ட் உட்பட பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா இணைந்து எழுதியுள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இசையில் கபிலன் பாடல்கள் எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் இப்படம் வெளியாகிறது.