பரிதாபங்கள் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’. இதில் ஹரிபிரியா நாயகியாக நடிக்க, ஷீபா கிறிஸ்டி, அருள் டி.ஷங்கர், எலிசபெத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கும் இப்படத்துக்கு அபிஷேக் ஒளிப்பதிவு செய்கிறார். ஆன்ஷ்வா புரொடக் ஷன்ஸ் தயாரிக்கிறது.
“90’ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இப்படம் சுவாரஸ்யமாக சொல்லும். நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை திரையில் பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார் இயக்குநர்.