தமிழ் சினிமா

ட்ரெண்டிங்கில் ஹிட் அடிக்கும் ‘வாரிசு’ படத்தின் ‘தீ தளபதி’ பாடல்

செய்திப்பிரிவு

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் ‘தீ தளபதி’ பாடல் வெளியாகியுள்ளது. சிம்பு பாடியுள்ள இந்தப்பாடலை விஜய் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

அண்மையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து எம்.எம்.மானசி பாட, பாடல் வரிகளை விவேக் எழுதியிருந்தார். இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘தீ தளபதி’ படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார்; விவேக் பாடலை எழுதியுள்ளார். விஜய் நடித்த ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விஜய்யின் 30 ஆண்டு திரைத்துறை பயணத்தை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT