தமிழ் சினிமா

மீண்டும் மணிகண்டன் உடன் இணையும் விஜய் சேதுபதி

செய்திப்பிரிவு

மணிகண்டன் - விஜய் சேதுபதி கூட்டணி இணைப்பில் வெளியான முதல் படம் 'ஆண்டவன் கட்டளை'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்துக்குப் பிறகு இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தார்கள். இதன்பின் மணிகண்டன் இயக்கத்தில் 'கடைசி விவசாயி' படத்தில் விஜய் சேதுபதி ஒரு கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கவும் செய்தார். முதலில் ஓடிடி வெளியீடாக இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், மணிகண்டனுடன் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி இணையவிருக்கிறார். இருவரும் மீண்டும் இணைவது தொடர்பாக பல முறை சொல்லப்பட்டாலும், அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதனிடையே, விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் இருவரும் மூன்றாவது முறையாக இணையவிருப்பதை வெளிப்படுத்தினார். ஆனால் இம்முறை திரைப்படமாக இல்லாமல், வெப் சீரிஸ் ஒன்றிற்காக இணையவிருப்பதாக விஜய் சேதுபதி அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதனால் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT