வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் இந்த ட்ரெய்லரை எப்படி அணுகியுள்ளனர் என்பது குறித்து பார்ப்போம்.
நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரைத் துறைக்கு திரும்பியிருக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், 'லொள்ளு சபா' மாறன், மனோபாலா, 'லொள்ளு சபா' சேசு, டி.எம்.கார்த்திக், 'கேபிஒய்' ராமர், பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடந்த 14-ம் தேதி சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு குரலில் வெளியான ‘அப்பத்தா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று (டிசம்பர் 1) வெளியானது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருதரப்பினர் படத்தின் ட்ரெய்லரை வரவேற்று ‘வடிவேலு இஸ் பேக்’ என பதிவிட்டுள்ள அதேநேரம், பெரும்பாலான வடிவேலு ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த கலவையான நெட்டிசன்களின் கருத்துகளைப் பார்ப்போம்.
வடிவேலு முருகன் ரியாக்ஷன்:
சிவக்குமார் வெங்கடாசலம் பதிவு:
சிலம்பரசன் பதிவு
இரா.ச.இமலாதித்தன் பதிவு
இப்படியான பல பதிவுகள் கேட்கும் கேள்வி ஒன்றுதான்: வடிவேலு எங்கே?
முழுநீளத் திரைப்படமாவது ஏமாற்றம் தராமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.