கமல் | கோப்புப் படம் 
தமிழ் சினிமா

பேசும் படம் வெளியாகி 35 வருடம்:  கமல்ஹாசன் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம், ‘பேசும் படம்’. அமலா, டினு ஆனந்த், சமீர் கக்கார், பிரதாப் உட்பட பலர் நடித்திருந்தனர்.

எல்.வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். இந்தியில் ‘புஷ்பக்’ என்ற பெயரில் வெளியானது. தேசிய விருது பெற்ற இந்தப் படம், 1987ம் ஆண்டு நவ. 27ல் ரிலீஸ் ஆனது.

இது வெளியாகி 35 வருடங்கள் ஆனதை ஒட்டி, நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில், “என் இயக்குநர்களிலேயே இளமையானவர் சிங்கீதம் சீனிவாசராவ்தான். நாங்கள் உருவாக்கிய ‘புஷ்பக்’ இப்போது எங்களை விட மூத்துவிட்டது. அதற்கு 35 வயதாகிறது.

சிங்கீதம் சார், நாம் நமது கலையை மூப்படைய விடாதிருப்போம்... இதற்கும் நீங்கள் களுக்கென்று சிரிப்பீர்கள். அந்தச் சிரிப்புதான் இன்றும் எனக்குப் பிரியமான இசை” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT