'மாவீரன் கிட்டு' படத்தின் இரண்டாம் பகுதி திரைக்கதையை மாற்றியமைத்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'மாவீரன் கிட்டு'. இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் ஏசியன் சினி கம்பைன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
டிசம்பர் 2-ம் தேதி வெளியான இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. மேலும், பலரும் படத்தின் இரண்டாம் பகுதி மிகவும் மெதுவாக நகர்வதாக கருத்து தெரிவித்திருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து படக்குழு, இன்று முதல் படத்தின் இரண்டாம் பகுதியில் சில காட்சிகளை நீக்கிவிட்டார்கள். மேலும், திரைக்கதை சுவாரசியத்தை முன்னிட்டு, இரண்டாம் பகுதி திரைக்கதையையும் மாற்றியமைத்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
'மாவீரன் கிட்டு' படத்தைத் தொடர்ந்து தற்போது சந்தீப் கிஷன் - விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் பணியில் ஈடுபட்டு வருகிறார் சுசீந்திரன்.