சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'பலே வெள்ளையத் தேவா' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.
புதுமுக இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பலே வெள்ளையத் தேவா'. தர்புகா சிவா இசையமைத்துள்ள படத்தை சசிகுமார் தயாரித்துள்ளார்.
ஒரே கட்டமாக தேனியில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. டிசம்பர் 23-ம் தேதி வெளியீட்டுக்காக, இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தி வந்தது படக்குழு. அப்பணிகள் முடிந்தவுடன், தணிக்கைக்கு விண்ணப்பித்தது.
தணிக்கை அதிகாரிகள் எந்தொரு இடத்தையும் கட் செய்யச் சொல்லாமல் 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். தணிக்கை பணிகள் முடிந்துள்ளதைத் தொடர்ந்து டிசம்பர் 23-ம் தேதி வெளியீடு என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் புதுமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சசிகுமார். இதன் அறிவிப்பை 'பலே வெள்ளையத் தேவா' வெளியானவுடன் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.