குறும்படத்தில் யோகிபாபு 
தமிழ் சினிமா

விழிப்புணர்வு குறும்படம்: வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்த யோகி பாபு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு தூய்மை பணியாளர் வேடத்தில் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தார்.

குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் குப்பைகளை சேரித்து வரும் உர்பேசர் ஸ்மித் தனியார் நிறுவனம் சார்பில், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த குறும்படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு தூய்மைப் பணியாளராக நடித்துள்ளார். இந்த குறும்பட படப்பிடிப்பில் யோகி பாபு கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கினார். மேலும் தூய்மை பணியாளர்கள் போன்று சீருடை அணிந்து, 3 சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வாங்கினார்.

SCROLL FOR NEXT