நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்துவரும் 'வீர சிவாஜி', டிசம்பர் 16-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு,ஷாம்லி, ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'வீர சிவாஜி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. 'வீர சிவாஜி' டீஸர் மற்றும் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. தணிக்கையில் 'யு' பெற்றிருக்கும் இப்படம் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகும் என அறிவித்தார்கள்.
ஆனால், பல்வேறு பெரிய படங்கள் வெளியானதால் 'வீர சிவாஜி' வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் வெளியீடு என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
தற்போது டிசம்பர் 16-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது.