தமிழ் சினிமா

'சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என நம்புகிறேன்' - வதந்தி வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா

செய்திப்பிரிவு

புஷ்கர்–காயத்ரியின் வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள வெப்தொடர், ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி'. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா, புதுமுகம் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இத்தொடருக்கு சைமன் கே கிங் இசை அமைத்துள்ளார். டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் இந்தத் தொடரில் நடித்தது பற்றி எஸ்.ஜே.சூர்யா கூறும்போது, “இதன் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் என் உதவியாளர். அவர் இயக்கத்தில் முதன் முதலாக வெப் தொடரில் நடித்திருப்பதை பாக்கியமாகக் கருதுகிறேன். த்ரில்லர் என்றால், பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்கும். இதில் உணர்வு பூர்வமான கதைகளும் உண்டு. திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலம்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும். அந்த வகையில் இந்தத் தொடர் மூலம் சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT