அஜித் உடன் சிவகார்த்திகேயன் 
தமிழ் சினிமா

“பாசிட்டிவ் வார்த்தைகளுக்கு நன்றி...” - அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் நடிகர் அஜித்குமாரை சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பின்போது தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் எதிர்வரும் 2023 பொங்கலுக்கு வெளிவர உள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு இவரது பிரின்ஸ் படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

“அஜித்குமார் சாரை சந்திக்கும் வாய்ப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு அமைந்தது. வாழ்நாள் முழுவதுக்கும் மனதில் வைத்து கொண்டாடும் மற்றொரு சந்திப்பு. உங்களின் பாசிட்டிவ் வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்” என சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கு கேப்ஷனாக கொடுத்துள்ளார்.

அஜித் குமார் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல்.

SCROLL FOR NEXT