பிரபல எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. இவர், ‘குற்றப் பரம்பரை’, ‘குருதி ஆட்டம்’, ‘பட்டத்து யானை’, ‘இருளப்ப சாமியும் 21 கிடாயும்’ உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். இப்போது திரைப்படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். இவர், தனது பெயரில் பணம் கேட்டு மோசடி நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“என் பெயரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் மூலம் போலி நபர், பணம் கேட்டு ஏமாற்றுவதாக அறிந்தேன். தயவு செய்து யாரும் ஏமாற வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி பண மோசடி நடப்பது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.