நடிகர் சிம்பு இப்போது ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம் உட்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தை ஒப்பிலி என்.கிருஷ்ணா இயக்குகிறார்.
இது, கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ படத்தின் ரீமேக். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம், டிசம்பர் 14ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. இதனால் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.