தமிழ் சினிமா

80’ஸ் ரீயூனியன் யோசனை தோன்றியது எப்படி? - நடிகை லிஸி

செய்திப்பிரிவு

தென்னிந்திய சினிமாவில் 80களில் தடம் பதித்த நடிகர், நடிகைகள் ஒவ்வொரு வருடமும் சந்தித்து தங்கள் நட்பைக் கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் மும்பையில் கொண்டாடினர். இதில் டினா அம்பானி, அனில் கபூர், வித்யா பாலன், மீனாட்சி சேஷாத்ரி, பத்மினி கோலாப்பூரி ஆகிய இந்தி பிரபலங்களும் தென்னிந்திய நடிகர், நடிகைகளுடன் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், 80களில் அறிமுகமான நடிகர், நடிகைகள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் யோசனை, 13 வருடத்துக்கு முன் தனக்குத் தோன்றியது என்றும் அதை சுகாசினியிடம் தெரிவித்ததை அடுத்து ஒவ்வொரு வருடமும் இச்சந்திப்பு நடத்தப்பட்டு வருவதாகவும் நடிகை லிஸி தெரிவித்துள்ளார். “இதை ஆரம்பித்ததில் பெருமை அடைகிறேன். அடுத்த வருடம் புதிய இடம், புதிய உடைகளுடன் சந்திக்க இருப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT