எனக்கு இசையில் ஒரு நாயகனாக இருந்தால் போதும், படத்தில் நாயகனாக தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார் அனிருத்.
'3' படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் வெளியாகி 5 ஆண்டுகள் ஆனதையொட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் இசையமைப்பாளர் அனிருத்.
#KolaveriToColdWater என்ற ட்விட்டர் ஹேஷ்டேக்கில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் எப்போது படங்களில் நடிக்கப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அனிருத், "நடிப்பு எனக்கு சரிபடாது என நினைக்கிறேன். என்னுடைய பேஷனே இசை தான். 5 வருடங்களில் 13 ஆல்பங்கள் மற்றும் சில ஒரு பாடல்களில் இந்த இடத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். அந்த இடத்தைக் காப்பாற்றுவது தான் என் எண்ணமாக இருக்கிறது.
நான் தற்போது செய்து வருவதே எனக்கு பிடித்திருக்கிறது. வேறு விஷயங்களில் என்னுடைய கவனத்தை திசை திருப்ப நான் விரும்பவில்லை. எனக்கு இசையில் ஒரு நாயகனாக இருந்தால் போதும், படத்தில் நாயகனாக தேவையில்லை" என்று பதிலளித்திருக்கிறார்.
மேலும், 2017ம் ஆண்டில் 'அஜித் - சிவா படம்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'பவன் கல்யாண் - த்ரிவிக்ரம்', 'ஜெயம் ராஜா - சிவகார்த்திகேயன்' ஆகிய படங்கள் தன்னுடைய இசையமைப்பில் வெளிவரும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் அனிருத்.
அனிருத் அளித்துள்ள பதில் வீடியோ வடிவில்: