நடிகை பூர்ணா 
தமிழ் சினிமா

நடிகை பூர்ணாவை கடத்த முயன்ற வழக்கு: நீதிமன்றம் புது உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில்நடித்து வருபவர் பூர்ணா. கடந்த 2020ம் ஆண்டுஅவரை தங்கக் கடத்தலில் ஈடுபடுத்த ஒரு கும்பல் முயன்றது. பின்னர் திருமணம் செய்வதாகக் கூறிஅவரைக் கடத்திப் பணம் பறிக்க திட்டமிட்டது.

இது குறித்து பூர்ணாவின் தாய் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீஸார், 10 பேர் கொண்டகும்பலை கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு எர்ணாகுளம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் டிச.12ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூர்ணா, துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT