நடிகர் கார்த்தி இப்போது, ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ராஜூ முருகன் இயக்குகிறார். நடிகர் கார்த்தி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர்.
அவருடைய முகநூல் பக்கத்தை சில மர்மநபர்கள் திடீரென முடக்கியுள்ளனர். அவர் முகநூல் பக்கத்தில் வீடியோ கேம் விளையாடுவது நேரலையில் நேற்று வந்தது. இதைக் கண்டு ரசிகர்கள் குழம்பிய நிலையில், கார்த்தி தனது முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.