தமிழ் சினிமா

வீட்டுலதான் கேட்கணும் - திருமணம் பற்றி ரகுல் ப்ரீத் சிங்

செய்திப்பிரிவு

தமிழில், ‘தடையறத் தாக்க’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, ‘என்ஜிகே’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர், சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ‘அயலான்’ விரைவில் வெளியாக இருக்கிறது.

கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்திலும் நடிக்கிறார். இந்தியிலும் நடித்து வரும் அவர், தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார். விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், “திருமணம் எப்போது?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரகுல், “அதை எங்க வீட்டுலதான் கேட்கணும். அவங்களும் அதையேதான் கேட்கிறாங்க” என்றார்.

SCROLL FOR NEXT