தமிழ் சினிமா

டிக்:டிக்:டிக் மூலம் அறிமுகமாகும் ஜெயம் ரவி மகன்

ஸ்கிரீனன்

சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் 'டிக்:டிக்:டிக்' படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம் 'மிருதன்'. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டது. வசூல் ரீதியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமானார். இப்படத்தை ஜெபக் தயாரிக்க, நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார்.

'டிக்:டிக்:டிக்' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படம் விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் த்ரில்லர் படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான அரங்கு அமைத்து அதற்குள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார் ஜெயம் ரவி. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார்.

SCROLL FOR NEXT