சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் 'மாவீரன் கிட்டு' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மாவீரன் கிட்டு'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு பாடல்கள் மற்றும் வசனம் எழுதியிருக்கிறார் யுகபாரதி.
இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இறுதிகட்ட பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, படத்தை தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு.
இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
'மாவீரன் கிட்டு' படத்தின் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் - விக்ராந்த் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் சுசீந்திரன்.