புதிய திரைப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடுவது பற்றி ஆலோசிப்பதற்காக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர், “சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடுவதால், திரையரங்குகள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுபற்றி முக்கிய முடிவு எடுக்க வேண்டி இருப்பதால், ஒரு கலந்தாய்வு கூட்டத்தை நடத்த தங்களுக்கு வசதியான தேதியை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.