> ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம், ‘ஜப்பான்’. இது அவருக்கு 25வது படம். நாயகியாக, அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கின்றனர். இதன் தொடக்கவிழா சென்னையில் நேற்று நடந்தது.
> நடிகர் விக்ரமுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி இருக்கிறது.
> விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.