பரத் நடிக்கும் 'மிரள்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிக்கும் படம் 'மிரள்'. இப்படத்தில் வாணி போஜன் நாயகியாக நடித்துள்ளார்.
டில்லிபாபு தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரசாத் இசையமைத்துள்ளார். ஹாரர் - த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார்,காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?
திகிலுடன் பல்வேறு ஹாரர் பாணியில் வெளியாகியிருக்கும் ட்ரெய்லர் ஈர்க்கிறது. வாணிபோஜன் நடிப்பு பதட்டத்தைக்கூட்டுகிறது. இசையும், காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. டார்க் ஹாரர் வகையாறா படமாக இப்படம் இருக்கும் என்பதை உணர முடிகிறது. கடைசி ப்ரேம் வரை படம் ஏதோ சஸ்பென்ஸை தனக்குள் வைத்திருப்பதை உணர்த்துகிறது. நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது மிரள்.
ட்ரெய்லர் வீடியோ: