தமிழ் சினிமா

‘இந்தியன் 2’ வில் யுவராஜ் சிங் தந்தை

செய்திப்பிரிவு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம், ‘இந்தியன் 2’. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தனக்கு மேக்கப் போடும் புகைப்படத்தை யோக்ராஜ் சிங் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான யோக்ராஜ் சிங், இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT