தமிழ் சினிமா

ஜூலை 25ம் தேதி முதல் ஜிகர்தண்டா

செய்திப்பிரிவு

பெரும் இழுபறி நீடித்து வந்த நிலையில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தயாரான 'ஜிகர்தண்டா' ஜூலை 25ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்க, கார்த்தி சுப்புராஜ் இயக்கிய படம் 'ஜிகர்தண்டா'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கதிரேசன் தயாரித்திருந்தார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், சென்சார் அதிகாரிகளுக்கு படத்தினை திரையிட்டு காட்டினார்கள். படத்தினைப் பார்த்த சென்சார் குழு 'U/A' சான்றிதழ் அளித்தது. படத்திற்கு U சான்றிதழ் வாங்கிட, படக்குழு எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. இதனால் தற்போது U/A சான்றிழுடன் படத்தினை முடிவு செய்து விட்டார்கள்.

ரம்ஜான் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு ஜூலை 25ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT