தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு

செய்திப்பிரிவு

ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள 'ருத்ரன்' படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ’ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. கையில் ஆயுதத்துடன் லாரன்ஸ் ஆக்ரோஷமாக நிற்க, அவரால் தாக்கப்பட்ட பலர் கீழே விழுந்து கிடப்பது போல பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. வழக்கமான ஆக்‌ஷன் மசாலாவுடன், ஆக்ரோஷத்தில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்கிறார் லாரன்ஸ். அத்துடன் வீடியோ நிறைவடைகிறது. டிசம்பர் 23-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. க்ளிம்ஸ் வீடியோ:

SCROLL FOR NEXT