தமிழ் சினிமா

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஹரிஷ் கல்யாண்?

செய்திப்பிரிவு

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.

தோனி என்டர்டெய்ன்மெண்ட், தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது. இந்த படம், தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் நிர்வாக இயக்குநரான சாக்ஷியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும். இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்த நாவல் ஒரு புதிய யுக கிராஃபிக் நாவல் என்று சில தினங்கள் முன் அறிவிக்கப்பட்டது.

இப்போது இந்தப் படம் சில அப்டேட்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஹரிஷ் கல்யாண் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரியங்கா மோகன் இதில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. என்றாலும், இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

அப்படி அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகும் பட்சத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு கல்யாண பரிசாக அமையும். நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் திருமணம் நாளை நடக்கவுள்ளது.

SCROLL FOR NEXT