‘சர்தார்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.
‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'. தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தண்ணீர் மாஃபியா குறித்தும், உளவாளியின் வாழ்க்கை குறித்தும் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 5 நாட்களில் படம் ரூ.50 கோடி வசூலை ஈட்டியுள்ள நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய கார்த்தி, 'சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகத்துக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது' என்றார்.