தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு சூர்யா - ஜோதிகா தீபாவளி வாழ்த்து 

செய்திப்பிரிவு

நடிகர்கள் சூர்யா - ஜோதிகா இணைந்து தங்கள் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா பெற்றபோது, நடிகை ஜோதிகா தன் போனில் ஃபோட்டோ எடுத்தார். அதே போல சிறந்த படத்துக்கான தேசிய விருதை தயாரிப்பாளராக ஜோதிகா விருதைப் பெற்றார். அப்போது சூர்யா தன் ஃபோனில் ஃபோட்டோ எடுத்தார். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவின. இதனையடுத்து இந்த தம்பதிகளின் இந்த புகைப்பட பரிமாற்றத்தை ரசிகர்கள் ஷேர் செய்தனர்.

இந்த நிலையில் இருவரும் இணைந்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதனை நடிகர் சூர்யா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சூர்யா தற்போது சிவா இயக்கும் படத்திலும், ஜோதிகா மம்மூட்டியுடன் இணைந்து காதல் படத்திலும் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT