அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி நடிக்கும் 'நித்தம் ஒரு வானம்' படம் நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'. ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் ரித்துவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி ஷிவாத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சென்னை, சண்டிகர், மணலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா என உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்த நிலையில், படம் வரும் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுந்தர்.சியின் 'காபி வித் காதல்' படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.