தமிழ் சினிமா

கான், புதுப்பேட்டை 2 எப்போது?- செல்வராகவன் பதில்

ஸ்கிரீனன்

'கான்', 'புதுப்பேட்டை 2', 'சந்தானம் படம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட படங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

செல்வா - யுவன் இணைக் கூட்டணியில் உருவான பாடல்கள் எப்போதுமே இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இடையில் பிரிந்த இக்கூட்டணி மீண்டும் இணைந்து 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.

டிசம்பரில் வெளியிட ஆயுத்தமாகி வரும் நிலையில் செல்வராகவன், யுவன் இணைந்து ட்விட்டரில் இணைந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்கள். #AskSelvaYuvan என்ற ஹேஷ்டேக்கில் பலரும் கேள்விகள் எழுப்பினார்கள். அதில் 'கான்', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'சந்தானத்துடன் இணையும் படம்', 'புதுப்பேட்டை 2' உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தது செல்வா - யுவன் இணை.

அப்பதில்களின் தொகுப்பு இங்கே:

"'கான்' படத்தைப் பற்றிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். எனக்கும், யுவனுக்கும் சிம்பு நெருங்கிய நண்பராவார். அப்படம் விரைவில் மீண்டும் தொடங்கப்படும். அப்படம் ஒரு வித்தியாசமான பரிமாணமாக இருக்கும்.

சந்தானத்துடன் இணையும் படம் முழுமையான காமெடி படம் கிடையாது. நானும், யுவனும் அப்படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். ஏனென்றால் 8 ஆண்டுகள் கழித்து, இருவரும் காதல் படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். '7ஜி ரெயின்போ காலனி' பாணியில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கும்.

நிறையப் பேர் 'புதுப்பேட்டை 2' பற்றிக் கேட்கிறீர்கள். கண்டிப்பாக அந்தப் படத்துக்கு யுவன் வேண்டும். (சிரித்துக் கொண்டே) அவர் கால்ஷீட் கொடுத்தால், கண்டிப்பாக நடக்கும். ஆனால் 'புதுப்பேட்டை 2' உறுதியாக விரைவில் நடைபெறும். அதற்காக முயற்சி செய்வேன்.

'நெஞ்சம் மறப்பதில்லை' படம் பார்க்க வரும் போது, எதையும் மனதில் வைத்துக் கொண்டு வராதீர்கள். திறந்த மனதுடன் வந்தால், அந்தப் படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும்" என்று தனது அளித்துள்ள பதில்களில் தெரிவித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

ட்விட்டர் செல்வராகவன் - யுவன் இணைந்து அளித்த பதில்களின் வீடியோ தொகுப்பு:

</p>

SCROLL FOR NEXT