பாலமுரளி கிருஷ்ணா போன்று ஒரு இசைக் கலைஞர் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலில் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, "இவர் போன்ற ஓர் இசைக் கலைஞர் இல்லை என்று இந்தியா பெருமையாகச் சொல்லிக் கொள்ளுமளவுக்கு திறமை வாய்ந்தவர்.
இவர் திறமையைப் பற்றி புகழ்வதற்கான அருகதை இருப்பதாக கூட நான் நினைக்கவில்லை. இப்படியும் ஒருவார் வாழ்ந்தார், இசைந்தார் என்று வரும் காலத்தை நம்ப வைக்க வேண்டும்.
என்னை விட தகுதியுள்ள இசைக்கலைஞர்களும், சீடர்களும் இருக்கும் போது, எனக்கும் இந்த தருணத்தில் அவரைப் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாகவே நினைக்கிறேன்.
இந்த வீட்டுக்கு பலமுறை வந்து, அவருடைய இசைப்பேச்சைக் கேட்டு வாங்கி சென்றவன் நான். வணங்குவதை தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றாது விடைபெறுகிறேன்" என்று