தமிழ் சினிமா

18 மாதம் 62 நாடுகள் 7 கண்டங்கள் - அஜித்தின் அசத்தல் பைக் டூர் திட்டம்

செய்திப்பிரிவு

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் ‘துணிவு’ படத்தை முடித்துவிட்டார் அஜித்குமார். இதில் மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கிறார். பேட்ச் ஒர்க் மட்டும் பாக்கி இருக்கிறது.

அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். லைகா தயாரிக்கும் இதன் ஷூட்டிங்கில் விரைவில் இணையும் அவர், அடுத்த வருடத் தொடக்கத்தில் படத்தை முடிக்க இருக்கிறார். பின்னர், தனது நண்பர்களுடன் பைக்கில் உலகச் சுற்றுலா செல்ல இருக்கிறார். 18 மாதங்களில் 62 நாடுகளுக்கு அவர் பைக் டூர் செல்ல இருக்கிறார். அண்டார்டிகா உட்பட 7 கண்டங்களுக்கு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த 18 மாதங்கள், சினிமாவுக்கு விடுமுறை அளித்துவிட்டு இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அஜித். சமீபத்தில், தாய்லாந்திலும் அவர் பைக் டூரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT