தமிழ் சினிமா

நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு சரத்குமாருக்கு அழைப்பில்லை: விஷால் தகவல்

செய்திப்பிரிவு

நவம்பர் 27-ம் தேதி நடைபெற இருக்கும் நடிகர் சங்க பொதுக்குழுவிற்கு சரத்குமார் மற்றும் ராதாரவி இருவருக்கும் அழைப்பில்லை என்று விஷால் தெரிவித்தார்.

இது குறித்து விஷால் கூறியது, "நவம்பர் 27-ம் தேதி நடிகர் சங்கப் பொதுக்குழு சென்னையில் கூடவிருக்கிறது. இதில் 'செவாலியே' விருது பெறவிருக்கும் கமலுக்கு பாராட்டு விழா நடத்தப்படும். மேலும், நடிகர் சங்கத்தின் மூத்த நாடக கலைஞர்களை கவுரவித்து விருதுகள் வழங்கப்படும்.

இந்த பொதுக்குழுவுக்கு முன்னாள் உறுப்பினர்கள் சரத்குமார், ராதாரவி இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட மாட்டாது. இது எனது தனிப்பட்ட முடிவு கிடையாது. நடிகர் சங்கத்திலிருந்து இருவருமே தற்காலிமாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும், இருவரும் சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அழைப்பு அனுப்பும் முடிவு இல்லை.

மேலும், முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரும் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT