தமிழ் சினிமா

ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

ஸ்கிரீனன்

'ஈட்டி' ரவிஅரசு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' தற்போது வெளியாகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 'ப்ரூஸ்லீ' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், '4ஜி', 'சர்வம் தாளமயம்', 'அடங்காதே' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அதனைத் தொடர்ந்து 'ஈட்டி' படத்தின் இயக்குநர் ரவிஅரசு கூறிய கதை பிடித்துவிடவே, தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

அடுத்தாண்டு துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இப்படத்தை 'ஆரஞ்சு மிட்டாய்' மற்றும் 'றெக்க' படங்களின் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கவிருக்கிறார்.

தற்போது ஜி.வி.பிரகாஷுடன் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT