தமிழ் சினிமா

கடலூரில் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு - வைரலாகும் ரஜினி, நெல்சன் புகைப்படங்கள்

செய்திப்பிரிவு

'ஜெயிலர்' படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினி மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் 'ஜெயிலர்'. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் என்ற கிராமத்தின் அருகே நடைபெற்று வருகிறது. புதுவை மாநில எல்லையில் இருக்கும் இந்த கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றின் கரையிலும், பாலப்பகுதியிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

SCROLL FOR NEXT