தமிழ் சினிமா

தணிக்கையில் யு: நவ.18ல் வெளியாகிறது கத்தி சண்டை

ஸ்கிரீனன்

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் 'கத்தி சண்டை' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. நவம்பரில் 18-ம் தேதி வெளியாகிறது.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கத்தி சண்டை'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை விநியோகம் செய்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. தணிக்கை ஆகாததால் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியீட்டு தேதியை அறிவிக்காமல் இருந்தது.

இறுதிகட்ட பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கையில் ஒரு சில காட்சிகளை மட்டும் நீக்கச் சொல்லி, 'யு' சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து படக்குழு நவம்பர் 17-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT