தமிழ் சினிமா

யு சான்றிதழ்: ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது அஞ்சான்

செய்திப்பிரிவு

சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் 'அஞ்சான்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது.

சூர்யா, சமந்தா, வித்யூத் ஜாம்வால், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'அஞ்சான்'. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை யு.டிவி நிறுவனம் வெளியிடுகிறது.

படத்தின் இசை வெளியீடு அனைத்தும் முடிவடைந்தாலும், ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை. இன்று 'அஞ்சான்' தெலுங்கு ரீமேக்கான 'SIKINDER' இசை வெளியீடு நடைபெற இருக்கிறது. நாகார்ஜூன், ராஜமெளலி, இயக்குநர் விநாயக் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்நிலையில் 'அஞ்சான்' படத்திற்கான சென்சார் பணிகள் மும்பையில் நடைபெற்றது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது யு.டிவி நிறுவனம்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து, "'அஞ்சான்' ட்ரெய்லர் அடுத்த வாரம் வெளியாகும். இயக்குநர் லிங்குசாமி அதற்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்களது எதிர்பார்ப்பிற்கு நன்றி” என யு.டிவியின் தென்னிந்திய மேலாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT