சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான 'டான்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'பிரின்ஸ்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர, நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான ஜெஸ்ஸிகாவும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.