தமிழ் சினிமா

சினிமா துளிகள்... நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம்

செய்திப்பிரிவு

> விஜய் சேதுபதி, இயக்குநர் மகிழ் திருமேனி உட்பட பலர் நடித்துள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டிசம்பரில் வெளியாகிறது. இதை வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ளார்.

> ‘தி வாரியர்’ ராம் பொத்தினேனி அடுத்து நடிக்கும் படத்தை போயபதி னு இயக்குகிறார். இதில் கன்னட நடிகை லீலா நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

> நடிகர் ஹரிஷ் கல்யாண் நர்மதா உதயகுமார் என்பவருடன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் திருமணம் எப்போது, எங்கே நடக்கிறது என்ற விவரத்தை அறிவிக்கவில்லை.

> ‘பொன்னியின் செல்வன்’ படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் ஷங்கர். “பல வருடங்களுக்குப் பின், தமிழில் தரமான வரலாற்று படம். பிலிம் மேக்கிங்கில் தான் ஒரு கிங் என மீண்டும் நிரூபித்துள்ளார் மணிரத்னம். சூழ்ச்சிகள் நிறைந்த கதை கவர்ந்திழுக்கிறது. பிரம்மாண்ட படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT