துல்கர் சல்மான் நடித்து வெற்றிபெற்ற ‘சீதா ராமம்’ படம் மூலம் பிரபலமாகி இருப்பவர் இந்தி நடிகை மிருணாள் தாக்கூர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதுபற்றி அவர்கூறியதாவது:
‘சீதா ராமம்’ படத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தியில் இதுபோன்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் சிறப்பாக நடிப்பேன் என்று இந்தி இயக்குநர்களை நம்ப வைக்கக் கடுமையாக முயற்சித்து வருகிறேன். ஆனாலும் வாய்ப்புகள்கிடைக்கவில்லை. எனக்கு கிடைக்கும் படங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சில இயக்குநர்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு தருகிறார்கள்.
எப்போதும் பலர், உன் வயது என்ன? என்றே கேட்கிறார்கள். நான் 30 என்றதுமே, நீங்கள்உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டும். உங்கள் திருமணத் திட்டம் என்ன? என்று சொல்லவும் கேட்கவும் தொடங்கி விடுவார்கள். இப்போது திருமணம் செய்தால், உங்களுக்கு 32 வயது ஆகும்போது குழந்தை பிறக்கும் என்றும் சொல்வார்கள். நான்அப்படியா, சரி குட்நைட் என்று முடித்துவிடுவேன். இவ்வாறு மிருணாள் தெரிவித்துள்ளார்.