தமிழ் சினிமா

"புஷ்பா படம் என்னை பான் இந்தியா நடிகையாக்கியுள்ளது" - ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

நடிகை ராஷ்மிகா மந்தனா, தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக `வாரிசு' படத்தில் நடித்துவரும் அதே வேளையில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியாகவுள்ள 'குட் பை' படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்தப் படம், வரும் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் புரொமோஷன் நிகழ்வு ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா, 'புஷ்பா' படம் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில், "கீதா கோவிந்தம் படம்தான் ஒரு நடிகையாக என்னை பலரை திரும்பி பார்க்க வைத்தது. அதற்குப்பிறகு 'புஷ்பா' படமே என்னை இந்தியா முழுவதும் நடிகையாக கொண்டுச் சேர்த்தது. அந்தப் படமே என் மீதான கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றியது.

ஒரு படமாக 'புஷ்பா' படத்தை நன்றாக எடுத்துள்ளோம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனினும் படத்தின் கான்செப்ட் பிடித்ததால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது" என்று ராஷ்மிகா நெகிழ்வாக பேசினார்.

SCROLL FOR NEXT