பாகுபலி Vs பொன்னியின் செல்வன் 
தமிழ் சினிமா

பாகுபலி Vs பொன்னியின் செல்வன் - ட்விட்டரில் மோதும் ரசிகர்கள்

செய்திப்பிரிவு

‘பொன்னியின் செல்வன்’ படத்தை ‘பாகுபலி’ படத்துடன் ஒப்பிட்டு தெலுங்கு ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பதில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் படமாக்கப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தேர்ந்த நடிகர்களின் நடிப்பின் மூலம் படம் கவனம் பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் படத்தை தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஒருபகுதியினர் பாகுபலியுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். பாகுபலி அளவிற்கு விஎஃப்எக்ஸ், பிரம்மாண்டம் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இல்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள், ‘பாகுபலி’ ஒரு கற்பனைக் கதை என்றும், ’பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புதினம் என்றும், ‘பாகுபலி’ படத்தின் பல காட்சிகள் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் தாக்கத்தில் உருவானவை என்றும் சுட்டிக்காட்டினர். ‘பொன்னியின் செல்வன்’ படத்தை ஒப்பிட ‘பாகுபலி’ சிறந்த படம் அல்ல என்று தமிழ் சினிமா ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால் இரு தரப்பும் கருத்து மோதலில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் ‘பாகுபலி’ எந்தப் பாகுபாடும் இல்லாமல் ரசிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் சில பதிவர்கள், அதையெல்லாம் மறந்துவிட்டு ஏன் தெலுங்கு ரசிகர்கள் இப்படி எதிர்மறையான கருத்துகளைப் பரப்ப வேண்டும் எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT